படித்தது நர்ஸ்... பார்த்தது டாக்டர் வேலை... நெல்லையில் இளம்பெண் கைது
நெல்லை: பி.எஸ்.சி நர்சிங் படித்து விட்டு எம்.பி.பி.எஸ் டாக்டர் போல அரசு மருத்துவமனைக்குள் சுற்றித்திரிந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சுமார் 3000 பேர் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாக சுமார் 5000 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளில் நுழைந்த ஒரு பெண்மணி, அங்கிருந்த நோயாளிகளிடம் தன்னை டாக்டர் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி விசாரித்துள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையின் டீன் டாக்டர். சித்தி அத்திய முனவரா இருந்த வார்டுக்குள் அந்த போலி மருத்துவர் நுழைந்து, சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித் திரிந்துள்ளார்.அவரது நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த டீன் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணான வகையில் பேசியுள்ளார்.
பெண்ணின் பதிலில் அதிருப்தியடைந்த டீன், உடனடியாக போலீசுக்கு போன் செய்தார். மருத்துவமனைக்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை விசாரணைக்காக ஐகிரவுண்ட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
முக்கூடல் அருகே உள்ள கபாலிப்பாறை கிராமத்தை சேர்ந்த பிரியா என்பது தெரியவந்தது. பி.எஸ்சி நர்சிங் முடித்துள்ள அவர், எதற்காக மருத்துவமனையில் டாக்டர் என்று கூறிக்கொண்டு சுற்றித் திரிந்தார் என்பது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவமனையில் போலி டாக்டர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications