போலி ஆவணம் தயாரிப்பு - துணை தாசில்தார் அதிரடி இடமாற்றம்
நெல்லை: போலியாக நில ஆவணங்கள் தயாரித்த வழக்கில் சிக்கிய அம்பை துணை தாசில்தார் சந்திரன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வழங்கினார்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள இரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் செய்யது அபுதாகீர். இவர் தொடர்பான ஆவணங்களை திருத்தியதாக அளித்த புகாரின் பேரில் அம்பை துணை தாசில்தார் சந்திரன் உள்பட 3 பேர் மிது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே போல் பாண்டி என்பவரும் அம்பை துணை தாசில்தார் சந்திரன் மீது புகார் அளித்தது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தி அந்த ஆவணங்களை ரத்து செய்ய உத்தரவிட்டதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து வருவாய் அலுவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனிடையே அம்பை துணை தாசில்தார் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் தொடர்ந்து பணி செய்து வருவதால் தேவையற்ற குழப்பம் மற்றும் ஆவணங்களை மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் அம்பை துணை தாசில்தாரை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பலர் வலியுறுத்தினர்.
டிஎஸ்பியின் மாநில செய்தி தொடர்பாளர் உஸ்மன்கான் இது தொடர்பாக நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தார். இதையடுத்து அம்பை துணை தாசில்தார் சந்திரனை நாங்குநேரிக்கு இடம் மாற்றம் செய்து கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் நெல்லை வருவாய் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications