பக்ரைன், மஸ்கட்டில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் தப்பிவந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னை: பக்ரைனில் விபத்து ஏற்படுத்தியதால் சிறையில் இருந்த கேரள வாலிபர், போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு பக்ரைனில் இருந்துவந்த விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜி(30) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதித்ததில் வேறு ஒருவர் பாஸ்போர்ட்டில் தனது போட்டோவை ஒட்டி எடுத்து வந்திருந்தது தெரியவந்தது.
இதுபற்றி அதிகாரிகளிடம் அவர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு பக்ரைனுக்கு சென்று கார் டிரைவராக வேலை செய்து வந்தேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்கு விபத்து ஒன்றில் சிக்கினேன். பக்ரைன் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். 6 மாத சிறை தண்டனைக்கு பின்னர் வெளியே வந்து, ஏஜெண்டுகளின் உதவியுடன் வேறு நபரின் பாஸ்போர்ட்டில் சென்னை வந்தேன் என்றார்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம்(40) வேறு நபரின் பாஸ்போர்ட்டில் தனது புகைப்படத்தை மாற்றி ஒட்டி மஸ்கட்டில் இருந்து விமானத்தில் சென்னை வந்த போது பிடிபட்டார். மஸ்கட்டில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்த இவருக்கு உரிய சம்பளத்தை அங்குள்ளவர்கள் அளிக்காததால் தப்பியோடிவந்தபோது பிடிபட்டுள்ளார்.
இதையடுத்து போலி பாஸ்போர்ட்டில் வந்த ஷாஜி, ஆறுமுகம் இருவரையும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் வழக்குப்பதிவு செய்து கேரள வாலிபர் ஷாஜி, ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications