மாயமான ஏஎன் - 32 விமானத்தில் சென்றவரின் செல்போன் செயல்படுகிறது?
சென்னை: சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமானுக்கு சென்ற போது மாயமான ராணுவ விமானத்தில் சென்ற ஒருவரின் செல்போன் எண் செயல்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவத்தளத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் - 32 விமானம் கடந்த 22 ஆம் தேதி அந்தமானுக்கு சென்ற போது மாயமானது.

அந்த விமானத்தில் 29 பேர் சென்றனர். விமானத்தில் சென்றவர்களின் நிலை என்னவானது என்பது இன்னமும் தெரியாமல் உள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த 17 பேர் விமானப்படையைச் சேர்ந்தவர்கள்.
பி.பட்சாரா (கேப்டன்), பி.கே. நந்தால் (துணை கேப்டன்), குணால் தர்பிட்டி, ஆர்.ரஞ்சன், ஜி.சவுத்ரி, கபில், தீபிகா, அகிலேஷ், பிபின் குமார், எல்.கே.திரிபாதி, ரகுவீர் வர்மா, நவ்ஜோத் சிங், ரவிதேவ் சிங், பி.சந்த், முகேஷ் தாக்கூர், சி.எஸ்.யாதவ், எக்நாதாக் ஆகியோர் விமானப்படையைச் சேர்ந்தவர்கள்.
விமல், கின்ஜாஷியாம் இருவரும் ராணுவத்தை சேர்ந்தவர்கள். பிரசாத் பாபு, பூர்ணசந்திரா, சரண் மகாராணா, சின்னாராவ், சீனிவாசராவ். சாம்பமூர்த்தி, பூபேந்திரசிங், நாகேந்திரராவ், சாஷீவ்குமார் ஆகிய 9 பேர் கடற்படை ஊழியர்கள். 29 பேருடன் மாயமான விமானத்தை தேடும் பணி இன்று 9வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் விமானத்தில் சென்ற 29 பேரில் ஒருவரின் செல்போன் எண் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 29 பேரில் ஒருவரான பெங்களூருவைச் சேர்ந்த ரகுவீர் வர்மா என்பவரின் குடும்பத்தினர் தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது எண்ணுக்கு இன்று காலையில் அழைப்பு சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடைய வாட்ஸ்ஆப் கடந்த 26 ஆம் தேதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மாயமான விமானத்தில் பயணித்த நபரின் செல்போன் செயல்படுவதாக கூறப்படுகிறதால் அந்த விமானத்தில் பயணித்தோர் உயிருடன் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications