ரசிகர்களே ரஜினி பேச்சை மதிக்க மாட்டேங்கிறாங்களே, வாக்காளர்கள் எப்படி கேட்பார்கள்?
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சொல்வதை அவரது தீவிர ரசிகர்களே கேட்கமாட்டேன் என்கிறார்களே, தமிழக வாக்காளர்கள் எப்படி கேட்பார்கள் என்ற சந்தேகம் அரசியல் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 3வது நாளாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த். முதல் நாள் சந்திப்புக்கு முன்பாகவே பல்வேறு நிபந்தனைகள் ரஜினிகாந்த் சார்பில் விதிக்கப்பட்டது.
வயது முதிர்வு, சுகாதாரம் போன்ற காரணங்களால் ரசிகர்களுடன் கை குலுக்க அனுமதி இல்லை. தோளில் கை போடக்கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

காலில் விழ வேண்டாம்
இன்று காலை ரசிகர்களை சந்திக்கும் முன்பாக ரஜினி பேசுகையில், நான் சிறு வயதில் ராஜ்குமார் ரசிகர். அவரை தொட்டுப் பார்க்க எனக்கும் ஆர்வம் இருந்தது என்று கூறியதோடு, செல்வாக்கு, பணம் உள்ளவர்கள் கால்களில் விழ வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்தார்.

தோளில் கை போட்டனர்
ஆனால், மேடையில் நடந்ததோ வேறு. சில ரசிகர்கள் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இன்னும் சில ரசிகர்கள் ஒருபடி மேலே போய், ரஜினிகாந்த் இடுப்பில் கை போட்டு போட்டோ எடுத்தனர். கைகளை ஓங்கியபடி சிலர் போஸ் கொடுத்தனர். சிலர் கைகுலுக்க முயன்றனர். ரஜினி கையை நீட்டாமல் தவிர்த்துவிட்டார்.

அதகளங்கள்
ஒரு ரசிகர் தனது கைகளாலேயே ரஜினிக்கு திருஷ்டி கழிப்பதை போல சுற்றிப்போட்டார். இப்படி பல அதகளங்கள் ரஜினி பேசிய அரை மணி நேரத்திற்குள் நடந்தேறியது. ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

வாக்காளர்கள் கேட்பார்களா
ரசிகர்களே ரஜினி பேச்சை கேட்காமல் அவரவர் இஷ்டம் போல நடந்து கொள்ளும் நிலையில், ரஜினி அரசியலுக்கு வந்து தொண்டர் படையை உருவாக்கி, அவர்களை தனது கட்டுக்குள் நிறுத்துவது எப்படி? அதற்கான திடமும், திறமையும் அவரிடம் உள்ளதா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடம் எழுந்துள்ளது.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications