சார் போர் வந்துடுச்சு கதவ திறங்க.... ரஜினியின் தாமதமான மெர்சல் ட்வீட்டுக்கு பொளேர் பதிலடி!

மெர்சல் திரைப்படம் குறித்த சர்ச்சைக்கு நடிகர் ரஜினி தாமதமாக டுவீட் போட்டதில் பயனில்லை என்று நெட்டிசன்கள் பதில் டுவீட்டில் கருத்து மோதலை நடத்தியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மெர்சலை பாராட்டிய ரஜினி...பாஜக குறித்து ஒன்னும் சொல்லலியே!-வீடியோ

    சென்னை : நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படம் குறித்து நடிகர் ரஜினி போட்ட டுவீட் தாமதமான டுவீட் என்று நெட்டிசன்கள் வார்த்தைப் போர் நடத்தியுள்ளனர்.

    தீபாவளிக்கு வெளியான நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து வரும் வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் பாஜகவின் இந்த எதிர்ப்பு, கருத்து சுதந்திரத்திற்கு விடுக்கும் சவால் என்று அரசியல் கட்சியினர் திரைத்துறையினர் கூறி வருகின்றனர்.

    நடிகர் கமல்ஹாசனும் மெர்சல் திரைப்படத்தை மற்றொரு முறை தணிக்கை செய்யத் தேவையில்லை என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதே போன்று தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கப் பொதுச்செயலாளரான விஷாலும் மெர்சல் படத்தை மறு தணிக்கை செய்யச் சொல்வது நியாயம் இல்லை என்று கூறி இருந்தார்.

    மெர்சலுக்கு ரஜினி பாராட்டு

    இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் மெர்சல் திரைப்படம் குறித்து பட்டும் படாமல் ஒரு கருத்தை டுவிட்டரில் பதிந்திருந்தார். அதில் முக்கியமான பிரச்னையை வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல முயற்சி, படக்குழுவினருக்கு பாராட்டு என்று மட்டும் பதிவிட்டிருந்தார்.

    திரைப்பட விமர்சனம் போல

    திரைப்பட விமர்சனம் போல

    மெர்சல் பிரச்னைக்கு எழும் சர்ச்சைகள் குறித்தும் அந்தப் படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டுமா வேண்டாமா என்று கூட வெளிப்படையான கருத்தை சொல்லவில்லை ரஜினி. மாறாக திரைப்படம் பார்த்து விட்டு சொல்லும் விமர்சனம் போல நல்ல கதையம்சம் மட்டும் பதிவிட்டிருந்தார்.

    தாமதமான குரல்


    எனினும் 4 நாட்கள் தாமதமாக வந்த டுவீட் என்றாலும் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரஜினி ரசிகர் ஒருவர் பதில் டுவீட்டில்

    ரஜினி அந்த கட்சி,கோழை,பயப்படுறாரு இப்படி எல்லாம் சொன்னவனுக்கு செருப்படி தலைவா என்று பதிவிட்டிருந்தார். ஆனால் இதற்கு கதிலடியாக தப்பா சொல்லல எல்லா முடிஞ்சிட்டு இப்ப ஆதரவு தெரிவித்து பயன் இல்ல, குரல் தேவைப்படும் போது குரல் ஒலிக்க மாட்டிக்குது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    பாஜகவை விமர்சிக்காதிரு

    ரஜினியின் பாபா படப் பாடலை வைத்தே ஒரு நெட்டிசன் பதில் டுவீட் போட்டுள்ளார். அதில்
    தாமரை இலை தண்ணீர் போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு,
    பாஜகவ விமர்சிக்காதிரு,
    உண்மையான பிரச்சனைய
    address பண்ணாதிரு,
    மாயா மாயா மாயா
    எல்லாம் மாயா
    என்று கூறி இருக்கிறார்.

    கதவ திறங்க போர் வந்துடுச்சு

    போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசி இருந்தார். அதை குறிப்பிட்டு நெட்டிசன் ஒருவர் ஒரு மீமை தட்டிவிட்டுள்ளார். சார் போர் வந்துடுச்சு கதவ திறங்க என்று நக்கலாக பதிந்துள்ளார்.

    2.0 ரிலீஸ் இருக்கு

    சாரி GST பத்தி எந்த கருத்தும் வெளிப்படையா சொல்ல முடியாத நெலமைல நான் இருக்கேன். ஏன்னா என்னோட 2PointO படம் ரிலீஸாக வேண்டி இருக்கு என்று ரஜினியின் டுவீட்டை விமர்சித்துள்ளார் இவர்.

    கடைசியில பினிஸிங் டச்

    எல்லா பிரச்சனைகளும் முடிஞ்சதுக்கு அப்போரம் கடைசியில் வந்து பினிஸிங் டச் குடுக்குறீங்க. எப்படி ஏட்டையா உங்கனால மட்டும் இப்படி முடியுது என்று காமெடியாக கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+