அரசியலுக்கு வரவில்லை.. அரசியலை சொல்ல வரோம்.. சூர்யாவின் நாடி துடிப்பை சரியாக பிடித்த ரசிகர்கள்
கள்ளக்குறிச்சி : 2K கிட்ஸ் காமராசரே எனவும் நீட் தேர்வை எதிர்த்த தமிழகத்தின் தலைமகனே என சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் காந்தி சாலை கச்சேரி சாலை சேலம் மெயின் ரோடு போன்ற பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் இந்த ஒட்டப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு முன்னரும் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது.

மருத்துவ சேர்க்கை
இந்த நிலையில் மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வை எழுதி வருகிறார்கள். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பள்ளி, கல்லூரிகள், மூடப்பட்டுள்ளன. இதனால் நீட் தேர்வை நடத்தாமல் பிளஸ் 2 மதிப்பெண்களை கொண்டு மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை எழுந்தது.

தோல்வி
ஆனால் உச்சநீதிமன்றம் வரை போய் தோல்வி அடைந்த நிலையில் அந்த தேர்வு கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகர் சூர்யா, நீட் தேர்வுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் நீதிமன்றத்தை கேள்வி எழுப்பும் அளவுக்கு அவரது அறிக்கை இருந்தது.

ரசிகர்கள்
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் சூர்யாவை பாராட்டும் விதமாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் நீட் தேர்வை எதிர்த்த இளைய காமராசரே. தாங்கள் அரசியலுக்கு வரவில்லை. அரசியலை சொல்லதான் வரோம் என ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு நடிகர்களின் ரசிகர்கள் அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டபட்டு வந்த நிலையில் நடிகர் சூர்யா அரசியலுக்கு வரமாட்டார் என்பதை உணர்த்தும் விதமாக கள்ளக்குறிச்சியில் போஸ்டர் ஒட்டபட்டுள்ளது.

விஜய்
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை அரசியலுக்கு அழைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதே கள்ளக்குறிச்சியில் விஜயை புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி வழியில் புரட்சித் தமிழன் என போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications