செங்கல்பட்டு மாஸ்.. அடியோடு புரட்டி போடும் திட்டம்.. கூடுவாஞ்சேரி முதல் வண்டலூர் வரை ஜொலி ஜொலிக்குது
செங்கல்பட்டு: சென்னையின் புறநகர் பகுதிகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதையடுத்து, சென்னையின் புறநகர்களில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கமும் செய்யப்பட்டிருக்கிறது.. அந்தவகையில் குட்நியூஸ் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் முதல் கூடுவாஞ்சேரி வரை திருச்சி - சென்னை மற்றும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நடுநடுவே, ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள்.
கட்டாயம்: குறிப்பாக, அதில் அனுமந்தபுரம், திருக்கச்சூர், ஒரகடம், மெல்ரோசாபுரம் மறைமலை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மற்றும் கூடலூர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, ஸ்ரீநிவாசபுரம், தைலாபுரம் கூடுவாஞ்சேரி போன்ற அனைத்து பகுதிகளிலும் தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான், அவரவர் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே, வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர்கள் வாகனங்களிலும், நடந்தும் சாலைகளை கடந்தும் சென்று வருகிறார்கள். ஆனால், சாலைகளை இப்படி கடக்க நேரிடும்போது, பொதுமக்களுக்கு சரியான நடைமேம்பாலங்கள் இந்த பகுதிகளில் இல்லை.. அதனால், பெரும்பாலும் ஆபத்தான முறையிலேயே சாலையை கடந்து செல்ல நேரிடுகிறது.
விபத்துக்கள்: இதனால் சிலசமயம் பெரிய, பெரிய விபத்துகளையும் சந்திக்க நேர்ந்துவிடுகிறது. அதனால்தான், விபத்துகளை தடுத்து, மனித உயிர்களை காக்கும்நோக்கில், தேவையான இடங்களில் நடைமேம்பாலங்களை அரசு அமைத்து வருகிறது.
அந்த வகையில் வண்டலூர் - சிங்கபெருமாள் கோயில் இடையே, ஜிஎஸ்டி சாலையில் 7 நடை மேம்பாலங்கள் வரப்போகிறதாம்.. சுமார் 20 கோடி செலவில், 7 நடை மேம்பாலங்கள் கட்டுவதற்காக தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது..
இந்த சாலை 8 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், போலீசாருடன் இணைந்து விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்து, அதற்கு பிறகே நடைமேம்பாலம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாம்..
விரைவில் ரெடி: குறிப்பாக, ரணியம்மன் கோவில், வண்டலூர் மற்றும் சிங்கபெருமாள்கோயில் ரயில் நிலையங்கள், தைலாவரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி, தைலாவரத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா, மறைமலை அடிகள் நகர் ஆகிய இடங்களில் இந்த நடைமேம்பாலங்கள் வரப்போகிறதாம். இந்த 7 நடைமேம்பாலத்திலுமே, லிஃப்ட், படிக்கட்டு வசதி அமைக்க போகிறார்களாம்..
மொத்தத்தில், கட்டுமானப்பணிகள் முடிவடைந்து, இன்னும் 6 மாதத்துக்குள் இந்த 7 நடைமேம்பாலங்களும் திறக்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கை கூறுகிறார்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.
மகிழ்ச்சி: இந்த மேம்பாலங்கள் வந்துவிட்டால், கல்லூரி மாணவர்கள், ரயில் பயணிகள், ஊழியர்கள், பக்தர்கள், உட்பட அனைத்து வாகன ஓட்டிகளுமே தேசிய நெடுஞ்சாலையை பாதுகாப்பாக கடக்க பேருதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications