வீட்டை விற்றாவது லஞ்சம் கொடு... போலீசின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி
மதுரை: வீட்டை விற்றாவது லஞ்சம் கொடுத்தால் தான் புகார் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் வேறு வழியில்லாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள செம்மினிப்பட்டியில் வசித்து வருபவர் சின்னயன். இவருடைய தம்பி இவருக்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்ததால், இவர் தனது சொந்த வீட்டிற்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டும்தான் சென்று வருவார். தனது வீட்டிற்கு செல்லும் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இருநாட்கள் தவிர மற்ற நாட்களில் ஆடு, மாடு மேய்த்துவிட்டு காடுகழனிகளில் தனது நாட்களை கழித்து வந்தார். இந்த இரண்டு நாட்கள் வீட்டிற்கு சென்று வருவதிலும் சிக்கல் இருந்து வந்ததால், வாடிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை சின்னயன் கொடுத்துள்ளார்.

சின்னயன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது தம்பியை விசாரிக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் முருகேசன் சின்னயனிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார். அவ்வளவு பணம் இல்லை தன்னிடம் இல்லை என்று சின்னயன் பதில் கூறியுள்ளார். இதற்கு இன்ஸ்பெக்டர் முருகேசன், வீட்டை விற்றாவது 10 ஆயிரம் கொடு என்று மிரட்டி இருக்கிறார்.
இன்ஸ்பெக்டரின் இந்த அடாத செயலால் என்ன செய்வது எங்கே மீண்டும் முறையிடுவது என்று தெரியாத சின்னயன் மனம் நொந்து போய், வாடிப்பட்டி அண்ணாசிலை முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு பூச்சிமருந்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு வாடிப்பட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சின்னயன் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications