தொடரும் சோகம்… திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி மாரடைப்பால் மரணம்
திருவாரூர் மாவட்டத்தில் மேலும் ஒரு விவசாயி மரணம் அடைந்துள்ளார். திருவாரூரில் மட்டும் வறட்சியின் காரணமாக இதுவரை 15 விவசாயிகள் பலியாகியுள்ளனர்.
திருவாரூர்: காவிரி டெல்டா பகுதியான திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். பயிர்கள் கருகியதை கண்ட அதிர்ச்சியில் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை திருவாரூரில் மட்டும் 15யைத் தாண்டியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெயக்குமார். இவர், வழக்கம் போல வயலுக்கு சென்றிருந்த போது, பயிர்கள் கருகி போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ளார். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதைக் கண்டு மனம் உடைந்த நிலையில் விவசாயி ஜெயக்குமார் இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வறட்சி பாதிக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 15 பேர் மரணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 80 விவசாயிகள் வறட்சிக்கு பலியாகியுள்ளனர். காவிரியும் இல்லாமல், மழையும் கை கொடுக்காமல் விவசாயிகளின் நிலை படுமோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று தமிழக அரசு விவசாயம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும், விவசாயிகளின் மரணம் குறித்தும் அவர்களின் குடும்பத்திற்கான இழப்பீடு குறித்தும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications