தொடரும் விவசாயிகள் மரணம்- வெண்மணி அருகே அதிர்ச்சியில் விவசாயி நடேசன் உயிரிழப்பு!
விவசாயம் பொய்த்துப்போன அதிர்ச்சியில் வெண்மணி அருகே விவசாயி நடேசன் உயிரிழந்துள்ளார்.
நாகை: காவிரி நீர் கிடைக்காமல் விவசாயம் பொய்த்துப் போன அதிர்ச்சியில் நாகை மாவட்டம் வெண்மணி அருகே விவசாயி நடேசன் மரணமடைந்திருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமல்படுத்தவில்லை கர்நாடகா. உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடகாவை மத்திய அரசும் கண்டிக்கவில்லை.

காவிரி நீர் உரிமையை நிலைநாட்டக் கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே முடியாது என தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்திருக்கிறது மத்திய அரசு. இதனால் முப்போக சாகுபடி நடைபெற்ற தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகள் ஒருபோக சாகுபடிக்கும் வழியற்ற நிலையில் இருக்கின்றன.
விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் காவிரி டெல்டா விவசாயிகள் செய்வதறியாது விரக்தியில் விஷம் அருந்தி உயிரை மாய்ப்பது தொடர்ந்து வருகிறது. காவிரி டெல்டாவில் அண்மையில் மட்டும் 4 விவசாயிகள் விஷம் அருந்தியும் அதிர்ச்சியிலும் மரணமடைந்துள்ளனர்.
தற்போது வெண்மணி அருகே தாவல்குடியைச் சேர்ந்த விவசாயி நடேசனும் விவசாயம் பொய்த்துப்போன அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். விவசாயிகளின் தொடர் உயிரிழப்புகள் காவிரி டெல்டாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications