ஓகி புயல் பாதிப்பு.. நிவாரணம் கோரி கன்னியாகுமரியில் விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு.. பதற்றம்
ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில்: ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய சங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை கடலில் இருந்தபடியே நெருங்கியது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளும் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஏராளமான ரப்பர் மரங்கள் வேறோடு சாய்ந்தன. புயலால் கொட்டித் தீர்த்த மழையால் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

குமரியில் முழு அடைப்பு
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரியும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரியும் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பேருந்துகள் இயக்கப்படவில்லை
இதில் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த முழுஅடைப்பு போராட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

குமரியில் பதற்றம்
இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக குழித்துறை,திருவட்டாறு, பயணம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு
முழுஅடைப்பு போராட்டம் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லைப்பகுதியான களியாக்காவிளையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமமடைந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications