எடப்பாடி பழனிச்சாமி காரை மறித்து விவசாயிகள் முற்றுகை… சேலத்தில் பரபரப்பு
எடப்பாடி பழனிச்சாமி காரை மறித்து விவசாயிகள் முற்றுயிட்டனர். வறட்சி பாதிப்பை பார்வையிடச் சென்ற அமைச்சர் கார் மறிக்கப்பட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்: வறட்சி பாதிக்கப்பட்டப் பகுதிகளை தமிழக அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர். அப்படி சேலம் மாவட்டத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற போது அவரது காரை விவசாயிகள் மறித்து முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர் கெங்கவல்லி பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது முல்லைவாடி அருகே அமைச்சரின் கார் சென்று கொண்டிருந்த போது விவசாயிகள் வழி மறித்து நின்றனர்.

முற்றுகையிட்ட விவசாயிகள், தங்கள் பகுதிகளையும் பார்வையிட வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பயிர் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அமைச்சரின் இந்த பதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர், வறட்சி தொடர்பான ஆய்வறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
இதனைப் போன்றே தருமபுரி மாவட்டத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications