காவிரி: மோடியின் உருவ பொம்மை எரிப்பு.. விவசாய சங்கத்தினர் 12 பேர் கைது
சென்னை: சென்னை தாம்பரத்தில் மோடியின் உருவ பொம்மையை எரித்த விவசாய சங்கத்தினர் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி நதி நீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ந் தேதிக்குள் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்று இன்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் இந்த உத்தரவில் திருத்தம் செய்யக் கோரி மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தாம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்பினர் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து மோடியின் உருவ பொம்மையை எரித்த விவசாய சங்கத்தினர் 12 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் கும்பகோணத்தில் மோடியின் உருவ பொம்மையை எரித்த தமிழ் தேசிய பேரியக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications