விவசாயிகள் தினத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை- தமிழகத்தில் இதுவரை 34 பேர் பலி
நாகை மாவட்டத்தில் சாகுபடி செய்த பயிர்கள் கருகியதால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் இதுவரை 34 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்: இந்தியாவில் இன்று விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளம் என நாடு முழுவதும் விவசாயிகள் கடும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்து விட்டது. வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் பயிர்கள் கருகி அழிந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் உடைந்து விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமடைந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிர்ச்சியில் மரணமடைவதும் நீண்டு கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 34 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 பேரும், திருவாரூரில் 5 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1, நெல்லை மாவட்டத்தில் 1, திருவள்ளூர் மாவட்டத்தில் 1, ஈரோடு மாவட்டத்தில் 2 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆந்தைக்குடியில் விவசாயி தியாகராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி தியாகராஜன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயிகள் தற்கொலை மற்றும் மனமுடைந்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 34 விவசாயிகளின் குடும்பங்களை முதல்வரோ, அல்லது அமைச்சர்களோ யாரும் நேரில் சந்தித்து இதுவரை ஆறுதல் கூட கூறவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும் விவசாயிகளும், எதிர்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை நெல் சாகுபடி நடைபெறவில்லை. ஒருபோக சம்பா நெல் சாகுபடியிலாவது பிழைத்துக் கொள்ளாலம் என நினைத்த தமிழக விவசாயிகளின் கனவு இந்த ஆண்டும் பலிக்கவில்லை. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications