விவசாய கடன் தள்ளுபடி.. டெல்டாவில் விஜய்க்கு பெருகும் எதிர்ப்பு! போராட்டத்தில் குதித்த விவசாயிகள்
நாகை: தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து நாகையில் விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிறு, குறு, பெரு விவசாயிகள் என்ற பாகுபாடு இன்றி தவெக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட விவசாய கடன் தள்ளுபடி பாரபட்சமாக உள்ளதை கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் நாகப்பட்டினம் அவுரி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் காவிரி தனபாலன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரபட்சமான கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை படி விவசாய கடன் தள்ளுபடி உடனே வழங்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காவிரி தனபாலன், தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ள கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை எனவும், இந்த அறிவிப்பை திரும்ப பெற்று, கடந்த கால காலங்களை போல குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், தவெக தேர்தல் அறிக்கைகள் கூறியது போல் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், கடன் தள்ளுபடியை வலியுறுத்தி வரும் 30ம் தேதி நாகையிலிருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும் என தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தத் கடன் தள்ளுபடி திட்டம் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்கு இது பொருந்தாது என்பது வருத்தம் அளிக்கும் விஷயமாக உள்ளது.
கடன் தொகை ரூ.50,000 வரை இருந்தால், குறு விவசாயிகளுக்கு முழு 100% தள்ளுபடி செய்யப்படும். ரூ.50,001 முதல் ரூ.60,000 வரை கடன் இருந்தால் ரூ.40,000 தள்ளுபடி செய்யப்படும். இதேபோல் ரூ.60,001 முதல் ரூ.70,000 வரை இருந்தால் ரூ.30,000 வரை தள்ளுபடி செய்யப்படும். இதுவே ரூ.70,001 முதல் ரூ.80,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.20,000 வரை தள்ளுபடி செய்யப்படும். மேலும் ரூ.80,001 முதல் ரூ.90,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
அதிகப்படியாக ரூ.90,001 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று இருந்தால் ரூ.5,000 தள்ளுபடி செய்யப்படும். சிறு விவசாயிகளுக்கு இதே கடன் அளவுகளில் 50% தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதாவது 50000 கடன் வாங்கியிருந்தால் அவர்களுக்கு 25000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறுப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம்












Click it and Unblock the Notifications