கொட்டிய மழை தொடரும் என நம்பிக்கை.... 7 ஆண்டுகளுக்குப் பின் நெல் நடவுப் பணிகள் மும்முரம்
மழை தொடரும் என்கிற நம்பிக்கையில் வேடசந்தூர் விவசாயிகள் நெல் நடவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

திண்டுக்கல்: ஐப்பசி, கார்த்திகையிலும் கனமழை தொடரும் என்கிற நம்பிக்கையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் நடவுப் பணிகள் மும்முரமடைந்துள்ளன.
தமிழகத்தின் வறட்சியான பகுதிகளில் ஒன்று வேடசந்தூர் வட்டம். வானம் பார்த்த பூமியாக, கொட்டும் மழையையும் நிலத்தடி நீரையும் மட்டுமே நம்பி இங்கு விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எங்கெங்கும் வெறுமை
கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனதால் எங்கெங்கு திரும்பினாலும் வெறுமைதான்... வேடசந்தூர் சுற்றுவட்டாரத்தில் தொலைதூர கிராமங்கள் கூட காய்ந்து போன செடி கொடிகளால், வேளாண் சாகுபடி இல்லாததால் பளிச்சென தெரிந்த பெருங்கொடுமை நிகழ்ந்தது.

காட்சிப் பொருளான நெல் நடவு
நெற்கதிர்கள் செழித்து திளைத்திருந்த வயல்கள் கைவிடப்பட்டு பராரிகளின் தேசம்போல காட்சி தந்தது. நெல் நடவுப் பணி என்பதே காண முடியாத காட்சிப் பொருளாகிப் போனது. தற்போது விடாது கொட்டிய கனமழை வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதிகளை மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மகிழ்ச்சியில் விவசாயிகள்
தொலைந்து போன பசுமையின் வாசத்தை இப்போது உணர முடிகிறது... கால்நடைகளுக்கு காசு கொடுத்து தீவனங்களை வாங்கி போட்டு கட்டுப்படியாகமல் விழிபிதுங்கியவர்கள் கண்களில் திரும்பிய திசையெங்கும் வளர்ந்து நிற்கும் சோளத்தட்டைகள் ஆனந்த கண்ணீரை உதிர்த்து கொண்டிருக்கிறது.

ஆறுதல் தரும் காட்சிகள்
ஆடி மாதம் பெய்த மழை ஐப்பசியிலும் கார்த்திகையிலும் தொடரும் என்கிற நம்பிக்கையில் மீண்டும் நெல் நடவுப் பணிகள் உயிர்ப்பித்திருக்கின்றன. நெல்வயல்களை பண்படுத்தி பரம்படிப்பது, நாற்று நடுதல் என விவசாயத்தை மட்டுமே இன்னமும் நம்பியிருக்கும் ஜீவன்கள் நீண்டகாலத்துக்குப் பின் சேற்றில் கால் வைத்திருக்கும் காட்சிகள் ஆறுதலைத் தருகின்றன.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications