அடுத்த அடி ஆரம்பம் – விலை வீழ்ச்சியால் ரோட்டில் கொட்டப்படும் தடியங்காய்
கோவில்பட்டி: கடுமையான விலை வீழ்ச்சியால் தடியங்காயை விவசாயிகள் ரோட்டில் வீசி விட்டு செல்லும் நிலைமை கோவில்பட்டியில் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, புதுக்கோட்டை, செட்டிக்குறிச்சி, காளான்பட்டி உள்பட பல கிராமங்களில் அதிக பொருள் செலவு இல்லாமல் விளையும் தடியங்காய்களை விளைச்சல் செய்துள்ளனர்.
இங்கு விளையும் பெரும்பாலான தடியங்காய்களை அருகே உள்ள கோவில்பட்டி சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தடியங்காய்கள் கிலோ ரூபாய் 15 முதல் ரூபாய் 20 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
இது போக போக குறைந்து தற்போது ரூபாய் 3 முதல் ரூபாய் 4 வரையே வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் அந்த விலைக்கு கூட வியாபாரிகள் நேற்று மாலை வாங்கி செல்லவில்லை.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த விவசாயிகள் தடியங்காய்களை பறித்து சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், இந்த ஆண்டு மழை குறைந்த அளவே பெய்ததால் மக்காசோளம், உளுந்து, பயிறு, பாசிபயிறு, சூரியகாந்தி ஆகியவற்றை பயிர் செய்தோம்.
ஆனால் போதிய மழை பெய்யாததால் பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் ஏக்கருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்குமாறு அரசிடம் கேட்டு கோரிக்கை வைத்தோம்.
தற்போது எங்களுக்கு மேலும் இழப்பு ஏற்படுத்தும் விதமாக ரூபாய் 20க்கு விற்ற தடியங்காய் தற்போது வெரும் ரூபாய் 4க்கே கொள்முதல் செய்யப்படுவதால் மார்க்கெட்டுக்கு அவற்றை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் அவற்றை சாலையோரம் கொட்டி விட்டு செல்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications