டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையிலும் விவசாயிகள் போராட்டம்! இரவும் தொடர்கிறது
டெல்லியில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் உள்ள விவசாயிகளும் காவிரி உரிமை மீட்புக் குழுவினரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கினர். இந்த போராட்டம் இரவிலும் தொடரும் என்று அறிவித்த
தஞ்சை: டெல்லியில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் உள்ள விவசாயிகள் இன்று தங்கள் போராட்டத்தை தொடங்கினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் வடகாடு, கோட்டைக்காடு கிராமங்களில் போராட்டங்கள் நடைபெறவுள்ளதால் தமிழகமே போராட்டக்களமாக உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதி நீர் இணைப்பு, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் கடந்த 15 நாள்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசு ஓப்பந்தத்தில் நேற்று கையெழுத்தானது. இதனைக் கண்டித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தை தொடங்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் காவிரி உரிமை மீட்புக்குழுவினரும், தஞ்சை விவசாயிகளும் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற அவர்களை ஆட்சியர் அலுவலகம் செல்லும் நுழைவாயிலில் காவல் துறை தடுத்து நிறுத்தியது. இதனால் பிரதான சாலை ஓரத்தில் அமர்ந்து உடலில் இலைகளை கட்டிக் கொண்டு பட்டை போட்டுக் கொண்டு விவசாயிகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்காண வறட்சி நிவாரணம் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கியுள்ளனர். போராட்டத்தை த.வெள்ளையன் தொடங்கி வைத்தார்.
தகவல் அறிந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளும் இவர்களுக்கு வலுசேர்க்க வருகை தந்த வண்ணம் உள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த இடத்தை விட்டு செல்வதில்லை என்று போராட்டக்குழுவினர் கூறியுள்ளதைத் தொடர்ந்து காவிரி உரிமை மீட்புக் குழுவினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications