For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டி: மாடு கழுத்தில் கட்டும் கயிற்றையும் விட்டு வைக்கலையே - ரூ.150 விலை உயர்வு

ஜிஎஸ்டி வரி ஆடு, மாடுகளின் அழகு சாதன பொருட்களையும் விட்டு வைக்கவில்லை. கடந்த ஆண்டு 100 ரூபாய்க்கு விற்பனையான கயிறு இப்போது 150 ரூபாய்க்கு விற்பனையாவதாக மாடு உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியால் மாடுகளின் கழுத்தில் கட்டப்படும் கயிறுகளின் உற்பத்தி செலவு அதிகரித்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகளுக்கு கட்டி அழகு பார்க்கப்படும் சலங்கை மணிகள், சங்கு கயிறுகளின் விலை உயர்ந்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி வரிவிதிப்பு காரணமாக கயிறுகள், சங்கு, மணிகள் விலை அதிகரித்துள்ளது.

Farmers upset over the price hike of Bull rope

மாட்டு பொங்கல் நாளில் கால்நடைகளை குளிப்பாட்டி அழகுபடுத்துவார்கள். மணிகள், சங்குகள், பல வண்ண கயிறுகளை கழுத்தில் கட்டி கொம்புகளில் வர்ணம் பூசி மாடுகளை அலங்கரிப்பர்.

தமிழகம் முழுவதும் கடைகளில் பொங்கல் பொருட்கள் வாரச்சந்தைகளில் குவிந்துள்ளன. மாடுகளுக்கு அணிவிக்கப்படும் கயிறுகள் அதிகளவில் குவிந்துள்ளன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் கயிறுகளின் உற்பத்தி செலவு அதிகரித்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு ரூ.100க்கு விற்கப்பட்ட கயிறு இந்த ஆண்டு ரூ.150க்கு விற்கப்படுகிறது. இந்த விலையேற்றம் கால்நடை வளர்ப்போர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

English summary
Tamil Nadu farmers are not happy in this Pongal as the bull rope's price has been hiked due to the GST.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X