காவல் ஆய்வாளருக்கு பளார்.. செல்போனை பிடுங்கிச் சென்றதால் ஆத்திரம்.. மயிலாடுதுறையில் தந்தை, மகன் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே போக்குவரத்துக்கு இடையூறு அளிக்கும் விதமாக சாலையில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரின் செல்போனை வாங்கிச் சென்ற காவல் ஆய்வாளரை காவல் நிலையத்துக்குச் சென்று தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தந்தை மற்றும் அவரது மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மொபைலில் கேம் விளையாடுவது, ரீல்ஸ் பார்ப்பது, பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பார்ப்பது, ஏன் சிலர் வாகனம் ஓட்டிக் கொண்டே நாடகம் பார்க்கும சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு அளிக்கும் வகையில் செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரை கண்டிப்பதற்காக காவல் ஆய்வாளர் ஒருவர் செல்போனை வாங்கி காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, காவல் நிலையத்துக்குச் சென்று காவல் ஆய்வாளரை தந்தை, மகன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ஜோதிராமன். இவர், கடைவீதி பகுதியில் காவல் வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரின் மகன் கிஷோர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டு செல்போன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் ஜோதிராமன் வாகனத்துக்கு வழிவிடாமல் நின்ற கிஷோரை இறங்கிச் சென்று கண்டித்துள்ளார்.
அப்போது, காவல் ஆய்வாளரிடம் கிஷோர் திமிராகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிஷோரின் செல்போனை வாங்கிக் கொண்டு காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார் ஜோதிராமன். இதைத்தொடர்ந்து, கிஷோர் மற்றும் அவரது தந்தை மகேஷ்வரன் இருவரும் சேர்ந்து குத்தாலம் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். பின்னர், கடைவீதியில் என் மகனை அடித்து எதற்காக செல்போனை பிடுங்கி வந்தீர்கள் என்று கூறி காவல் நிலைய ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, வாய்த்தகராறு முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த மகேஸ்வரன், காவல் ஆய்வாளர் ஜோதிராமனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதுதொடர்பாக, காவல் ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கி மிரட்டியதாக மகேஸ்வரன் மற்றும் அவரது மகன் கிஷோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தந்தை மகன் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். காவல் நிலையத்துக்குச் சென்ற காவல் ஆய்வாளரையே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications