மகள் கல்யாண சீர்வரிசைப் பொருட்களை விற்றுக் குடித்த தந்தை... தட்டிக் கேட்ட மகனை வெட்டித் தள்ளினார்!
திருவாரூர்: தனது தங்கையின் கல்யாணத்துக்காக வாங்கி வைத்திருந்த சீர்வரிசைப் பொருட்களையெல்லாம் விற்று குடித்த தந்தையைப் பார்த்து ஆத்திரமடைந்த மகன் அவருடன் சண்டை பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகன் என்றும் பாராமல் வெட்டிக் கொலை செய்து விட்டார்.
குடியால் அழியும் குடும்பங்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குடியின் கொடுமைக்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருவாரூரில் குடிகார தந்தையால் ஒரு மகன் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் திலகர் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (56). இவா் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடைய மகன் செல்வகுமார் (23). கட்டடத் தொழிலாளியாக வேலைபார்த்து வந்த இவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தனது சகோதரியிந் திருமணத்துக்கு சீர்வரிசைப் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். அதையும் செல்வராஜ் குடிப்பதற்காக விற்று விட்டார்.
இதனால் கொதிப்படைந்த செல்வகுமார் தனது தந்தையைத் திட்டியுள்ளார். அவருடன் சண்டை பிடித்துள்ளார். இந்த நிலையில், செப்டம்பர் 1ம் தேதி பிற்பகலில் நன்றாக குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்தார் செல்வராஜ். அப்போது அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரத்தின் உச்சிக்குப் போன செல்வராஜ், வீட்டில் கிடந்த கோடாரியை எடுத்து மகனின் கழுத்தில் ஓங்கி வெட்டி விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவாரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான செல்வராஜை தேடிப் பிடித்துக் கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications