தின்பண்டம் கொடுத்து 3 மாணவிகளிடம் தினசரி “சில்மிஷம்” .. அப்பாவும், மகனும் கைது
புதுக்கோட்டை: புதுகையில் 7ம் வகுப்பு மாணவிகளை வீட்டிற்கு கூட்டிச் சென்று அப்பாவும், மகனும் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை காமராஜ புரத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 7ம் வகுப்பில் 3 மாணவிகள் படித்து வருகின்றனர். தோழிகளான இவர்கள் 3 பேரும் பள்ளி இடைவேளை நேரத்தில் அருகில் உள்ள கடைகளுக்கு தின்பண்டம் வாங்க செல்வது வழக்கம்.
அப்படி கடைக்கு சென்ற போது அந்த பகுதியில் உள்ள துரை என்பவர் மாணவிகள் 3 பேரிடமும் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். தனது வீடு அருகில் தான் உள்ளது. அங்கு வந்தால் நிறைய பண்டங்கள் தருவதாக கூறி மாணவிகளை வீட்டிற்கு அழைத்துள்ளார். பண்டத்திற்கு ஆசைப்பட்ட மாணவிகள் 3 பேரும் துரையின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
துரையின் மனைவி இறந்து விட்டார். அவரது மூத்த மகன் பிரகாஷ் கூலி வேலைக்கு செல்பவர். 2வது மகன் ஐ.டி.ஐ படித்து வருகிறார். இதனால் துரை மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டிற்கு வந்த மாணவிகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்த துரை, அதன் பின்னர் மாணவிகளின் உடலில் பல இடங்களில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். முதலில் பயந்த மாணவிகள் அதன் பின்னர் மறுப்பேதும் சொல்லாமல் இருந்துள்ளனர்.
இதனால் தினமும் மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து துரை சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். துரை பள்ளி மாணவிகளை அழைத்து வந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதை ஒரு நாள் அவரது மகன் பிரகாஷ் பார்த்து விட்டார். இதன் பின் அவரும் மாணவிகளிடம் தவறாக நடந்துள்ளார். இது பல நாட்கள் தொடர்ந்து நடக்கவே ஒரு கட்டத்தில் மாணவிகள் 3 பேரும் விரும்பி அந்த வீட்டிற்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் தந்தை, மகன் இருவரும் எந்த தடையும் இன்றி தங்களது வக்கிரத்தை தொடர்ந்துள்ளனர்.
பல நாட்களாக இந்த சம்பவம் தெடர்ந்து நடந்ததால் மாணவிகள் 3 பேரின் நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டது. அடிக்கடி அந்த 3 மாணவிகளும் தங்களுக்குள் ரகசியமாக பேசி சிரிப்பது, ஒருவரையொருவர் கிண்டல் செய்வது என மற்ற மாணவிகளுடன் ஒட்டாமல் தனியாக இருந்துள்ளனர். இதை பார்த்த சக மாணவிகள் தங்களது ஆசிரியைகளிடம் விஷயத்தை கூறி உள்ளனர்.
இதை தொடர்ந்து ஆசிரியைகள் அந்த 3 மாணவிகளையும் அழைத்து விசாரணை நடத்தினர். முதலில் மாணவிகள் எதுவும் கூறாமல் மழுப்பி உள்ளனர். பின்னர் 3 பேரிடமும் தனித்தனியாக ஆசிரியைகள் விசாரணை நடத்தினர். அப்போது தான் தினமும் பள்ளிக்கு அருகில் உள்ள வீட்டிற்கு அவர்கள் செல்வதையும், அங்கு தந்தை, மகன் இருவரும் தங்களுக்கு தின்பண்டங்கள் தந்து சில்மிஷத்தில் ஈடுபடுவதையும் கூறியுள்ளனர். இதை கேட்ட ஆசிரியைகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் மாணவிகளின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து அவர்களிடம் இது குறித்து கூறி உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்றும், மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் கூறிய ஆசிரியர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் என பெற்றோர்களிடம் கூறியதாக தெரிகிறது.
ஆனால் 7ம் வகுப்பு மாணவிகளை ஆசை வார்த்தைகள் கூறி தினமும் வீட்டிற்கு அழைத்து சென்று தந்தை,மகன் இருவரும் தங்களது வக்கிரத்தை அரங்கேற்றிய கொடுமையை கேட்டு பெற்றோர்கள் கடும் வேதனை அடைந்தனர். அதில் ஒரு மாணவியின் தாய் இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கயல்விழி உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்.
முதலில் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் கயல்விழி பின்னர் மாணவிகளிடம் தனித்தனியாக என்ன நடந்தது?என கேட்டறிந்தார். அப்போது மாணவிகள் கூறியதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் கயல்விழி உடனடியாக துரையையும் அவரது மகன் பிரகாஷையும் இன்று கைது செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications