மனைவியுடன் சண்டை போட்டு 4 மாதக் குழந்தையை சுவற்றில் வீசி கொன்ற கொடூர தந்தை!
திருவாரூர்: திருவாரூர் அருகே 4 மாதக் குழந்தையை சுவற்றில் வீசி கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் அன்னுக்குடியைச் சேர்ந்தவர் மாதவன் (25). இவர் திருவாரூர் மருதப்பட்டினத்தைச் சேர்ந்த வைஷ்ணவி (25) என்ற பெண்ணை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 மாத ரோஹித் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், திருமணம் ஆன 5 மாதத்திலிருந்து மாதவன் வரதட்சணை கேட்டு வைஷ்ணவியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வைஷ்ணவி மருதப்பட்டணத்தில் உள்ள தனது தந்தைவீட்டுக்கு சென்று சிறிது காலம் இருந்துள்ளார்.
இதனிடையே நேற்று மருதப்பட்டிணம் சென்ற மாதவன், வைஷ்ணவியுடன் தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது, குழந்தையை வைஷ்ணவியிடம் இருந்து பிடுங்கியுள்ளார். வைஷ்ணவி குழந்தையை தராததால் ஆத்திரமடைந்த மாதவன், குழந்தையை பிடுங்கி சுவற்றில் வீசிவிட்டாராம்.

இதையடுத்து, குழந்தையை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிசிகிச்சைப் பலனின்றி குழந்தை ரோஹித் இன்று அதிகாலை உயிரிழந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், மாதவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications