அன்னிய செலாவணி மோசடி... தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு!
சென்னை: தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த 1996ஆம் ஆண்டு, ஜெ.ஜெ. டிவிக்கு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.28 கோடி அன்னிய செலாவணி மோசடி செய்ததாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை இரு வழக்குகளை பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு எழும்பூர் அல்லிக்குளம் பொருளாதார நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சசிகலா, பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சசிகலா ஏற்கெனவே பெங்களூர் சிறையில் உள்ளதால் அவரிடம் வீடியோ கான்பிரன்சிங்கில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை தம்மிடம் கேட்க வேண்டிய கேள்விகளை முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்று சசிகலா சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக சிறையில் உள்ள சுதாகரனை அழைத்து வருவதில் பாதுகாப்பு குளறுபடிகள் உள்ளதால் அவரை சென்னை அழைத்து வரும் முடிவை கர்நாடக சிறைத் துறை கைவிட்டது. இந்நிலையில் நேரில் ஆஜராக விலக்கு கேட்டும், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்க கோரியும் சுதாகரன் சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை வரும் 22-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கரன் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications