ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் – வேட்பாளர்கள் தயார்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. முதல் நாளில், அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.வளர்மதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகாலம் தண்டனை பெற்றதை அடுத்து, முதலமைச்சர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ஜெயலலிதா இழந்தார். இதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Filing of nominations for the Srirangam by-election begin on today

இடைத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வரும் 27-ஆம் தேதி, வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதற்கு மறுநாள் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெற 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 13-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 16-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

தயார் நிலையில்

இந்த நிலையில், திண்டுக்கல் சாலையிலுள்ள ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் (தேர்தல் நடத்தும் அலுவலரிடம்) அல்லது திருவானைக்கா டிரங்க் சாலையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலும் (உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்) வேட்பு மனுக்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாடுகள்

வேட்பாளருடன் எத்தனை வாகனங்கள் வந்தாலும் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிக்கு 100 மீட்டர் முன்னதாக அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு 3 வாகனங்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும்.

மனுதாக்கல் அலுவலகத்திற்குள் 1 வாகனம் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். அதேபோல் வேட்புமனு கொடுக்கும் அறையில் வேட்பாளருடன் 4 பேர் என ஒரு கட்சிக்கு 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் துவங்குவதையொட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் 70 போலீசாரும், ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் 150 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வளர்மதி மனு தாக்கல்

அதிமுக வேட்பாளர் வளர்மதி முதல்நாளான இன்று பிற்பகல் 12 மணிக்கு தனது வேட்புமனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தேர்தல் பிரச்சாரம்

இதையடுத்து, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலைச் சுற்றியுள்ள 4 உத்திர, சித்திரை வீதிகளிலும் அதிமுகவினர் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

இதற்காக, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ள 50 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள் திங்கள்கிழமை காலை ஸ்ரீரங்கம் வருகின்றனர்.

திமுக வேட்பாளர்

திமுக வேட்பாளர் என்.ஆனந்த் தனது வேட்புமனுவை வருகிற 22-ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கிறார். 24-ஆம் தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தொடர்ந்து, 25-ஆம் தேதி முதல் திமுகவின் தேர்தல் பணிக்குழுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 64 பேரும் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டு பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

தேர்தல் களத்தில்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்த பின்னர் வேட்பாளரை அறிவிப்பதாக, பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

விலகிய தமாகா

இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தேமுதிக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மவுனம் சாதித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+