மதன் கைது... என்னென்ன உண்மைகள் வெளிவருமோ? பரபரப்பில் தமிழ் திரையுலகம்!
சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் கைதாகிவிட்டார். 6 மாத கண்ணாமூச்சு ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மதன் கைதுக்கு பின்னணியில் சொல்லப்படும் போலீஸ் கதைகள், ராம்குமார் மின்சார ஒயரைக் கடித்த மாதிரிதான். அப்படியே நம்பிவிடத் தேவையில்லை.
காரணம், மதன் ஏற்கெனவே கைதாகிவிட்டார்... போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார் என கடந்த ஒரு மாத காலமாக வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஏதோ ஒரு சுபயோக சுபதினமாகப் பார்த்து போலீசார் அறிவிப்பார்கள் என்பதுதான் திரையுலகினரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. அது நிஜமாகியிருக்கிறது என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

மதன் தலைமறைவானதும், அவர் வரவு செலவு வைத்திருந்த பெரும்பாலானோர் பெரும் கவலையில் ஆழ்ந்தார்கள். இவரை நம்பி பல கோடிகள் கடன் தந்திருந்தனர், முதலீடு செய்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் ஒரு சிறு நம்பிக்கை.
அதே நேரம், மதனின் திருவிளையாடல்கள் என்னென்ன என்பதை யாரும் வெளியில் சொல்லவில்லை. அவர் காணாமல் போன பிறகு, அவருக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்தபோது கூட, 'அட.. அவர் அநியாயத்துக்கு பக்திமானுங்க... நாள் கணக்கில் சாப்பிடாமல் விரதமிருப்பார். சாமி படங்கள், பூஜை புனஸ்காரம் என்றுதான் பொழுதைக் கழிப்பார்..' என்றார்கள்.
இப்போது மதன் பிடிபட்டுவிட்டார். அவர் வாயிலிருந்து என்னென்ன உண்மைகள் வெளிவரப் போகிறதோ... குறிப்பாக பாரிவேந்தர், எஸ்ஆர்எம் தொடர்பாக என்னென்ன சொல்லப் போகிறாரோ... திரையுலகினர் யாரெல்லாம் இதில் சிக்கப் போகிறார்களோ என்ற முணுமுணுப்பு கேட்க ஆரம்பித்துள்ளது. உண்மைகள் வெளிவருமா... உள்ளுக்குள்ளேயே கமுக்கமாக வைக்கப்படுமா... பார்க்கலாம்!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications