முதல்வர் பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எல்.இ.டி. டிவி வெடித்தது!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், மேடையின் அருகே வைக்கப்பட்டிருந்த எல். இ. டி. டிவி வெடித்து தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், மேடையின் அருகே வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. டி.வி. வெடித்து தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்க உள்ளது. விழாவில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

வெகு விமர்சையாக விழா ஏற்பாடுகள், நடந்து வந்த நிலையில், மேடை அருகே வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. டி.வி. வெடித்தது. இதனால் அங்கு தீவிபத்து ஏற்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் விழா என்பதால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு நிலவியது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உரிய நேரத்தில் தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications