தாம்பரம் மார்க்கெட்டில் பயங்கர தீ.. தீயில் சிக்கி 10 கடைகள் நாசம்.. ரூ. 5 கோடி சேதம்
சென்னை: தாம்பரத்தில் இன்று பிற்பகல் நடந்த பயங்கர தீவிபத்தில் பிரபல பாத்திரக்கடை எரிந்து சேதமானது. 5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகவும், தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
தாம்பரம் பேருந்துநிலையம் எதிரே நெருக்கமான சண்முகம் சாலையில் உள்ளது ஸ்ரீமுருகன் ஸ்டோர்ஸ் என்ற பாத்திரக்கடை. இதன் கீழ்தளத்தில் ரோஜா ஸ்டோர்ஸ் என்ற ஹோம் அப்ளையன்ஸஸ் கடை உள்ளது.

முருகன் ஸ்டோர் கடையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கடையின் முன்புற பகுதியில் புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட ஊழியர்கள் அலறியடித்தபடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முயற்சி கைகொடுக்கவில்லை. தீ மளமளவென பரவியது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றன. ஆனால் அதற்குள் கடையின் முன்பகுதி பெருமளவில் எரிந்து நாசமாகின. 7 கடைகளுக்கு தீ பரவியது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி கிட்டதட்ட 2 மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது. கடையில் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்கான காரணம் என்று காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications