தாம்பரம் மார்க்கெட்டில் நள்ளிரவில் தீ விபத்து.. 15 கடைகள் நாசம்-பொருட்கள் கருகின
மார்க்கட் பகுதியில் தீ பிடித்ததால் 15 கடைகள் எரிந்த நாசமாயின
Recommended Video

சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 15 கடைகள் எரிந்து சாம்பலாயின
தாம்பரம் சண்முகா சாலையில் இயங்கி வரும் மார்க்கெட் பகுதியில் பாரதி திடல் என்னும் இடத்தில், காய்கறி கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள் என 20-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. எப்போதும் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்தே காணப்படும்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு திடீரென .தீப்பிடிக்க எரிய ஆரம்பித்தது. சற்று நேரத்திற்கெல்லாம் தீ மளமளவென பரவி கடைகள் பற்றி எரிந்தன. இதனால் பதற்றமான சூழ்நிலை அங்கு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.
தாம்பரம் மார்க்கெட்டில் நள்ளிரவில் தீ விபத்து.. 15 கடைகள் நாசம்-பொருட்கள் கருகின #TambaramFire pic.twitter.com/6UP8IElpLN
— Oneindia Tamil (@thatsTamil) April 28, 2018
இந்த தீ விபத்தில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது. அத்துடன், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின. தீ விபத்துக்கு மின்கசிவா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பன குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications