சிவகாசி அருகே அடுத்தடுத்து 2 பட்டாசு ஆலைகளில் விபத்து.. 4 பேர் உடல்கருகி பலி
சிவகாசி அருகே இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர்: சிவகாசி அருகே இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ராமுத்தேவன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தொழிலாளர்கள் பட்டாசுகளை அறையில் இருந்து லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

2 தொழிலாளர்கள் பலி
இதில் பட்டாசுகளை லாரியில் ஏற்றிய சேகர், ரவி என்ற இரண்டு தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். பட்டாசுகள் ஏற்றப்பட்ட லாரியும் எரிந்து எலும்புக்கூடானது.

விசாரணை
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்தனர். சம்பவ இடத்தில் கோட்டாட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை
பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் உட்பட 2 பேர் பலி
இந்நிலையில் சிவகாசி அருகே காக்கிவாடான் பட்டியில் மற்றொரு தொழிற்சாலையில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில் ஒரு பெண் உட்பட 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.

பெரும் சோகம்
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிவகாசி அருகே ஒரே நாளில் 2 ஆலைகளில் ஏற்பட்ட தீவிபத்திஙல் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications