நெல்லையில் வண்டியை குலுக்கியபோது பெட்ரோல் பங்க்கில் தீ.. இளைஞர் பலத்த காயம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நெல்லையில் வண்டியை குலுக்கியபோது பெட்ரோல் பங்க்கில் தீ
நெல்லை: நெல்லையில் வண்டியை குலுக்கிய போது பெட்ரோல் பங்க்கில் தீவிபத்து ஏற்பட்டதில் இளைஞர் காயமடைந்தார்.
நெல்லையில் ஒரு பெட்ரோல் பங்க்கில் ஆல்வின் என்ற இளைஞர் பெட்ரோல் போட வந்துள்ளார். அப்போது பெட்ரோல் போட்டு விட்டு வண்டியை குலுக்கி டேங்க்கை பார்த்துள்ளார்.

உடனே எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த இரு சக்கர வாகனம் தீப்பிடித்தது. வண்டியின் அருகில் இருந்த ஆல்வினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொதுவாக பெட்ரோல் பங்க்களில் பீடி, சிகரெட் பற்ற வைக்கக் கூடாது. அதுபோல் செல்போன் பேசினால் அந்த கதிர்வீச்சின் மூலமும் தீவிபத்து ஏற்படுவதால் போன் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications