திருப்பூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து
திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் இன்று மாலை திடீரென தீ பற்றியது. விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கொடுவாய் அருகே தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இன்று மாலை வழக்கம் போல வேலைகளை முடித்து விட்டு தொழிலாளர்கள் வெளியேறிய பின்னர் நூல் நூற்ப்பதற்க்காக வைத்திருந்த பஞ்சு மூட்டை இருந்த பகுதியில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. பஞ்சில் பற்றிய தீ சிறிது நேரத்தில் மளமள வென நூற்பாலையின் பல பகுதிகளுக்கு பரவி தீ கொழுந்து விட்டு எரிய துவங்கியது.
இதனை கண்ட அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பொது மக்கள் மற்றும் நூற்பாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீயின் தன்மை அதிகமாக இருந்ததால் மேலும் சில தண்ணீர் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.












Click it and Unblock the Notifications