சேலத்தில் கார் உதிரி பாக விற்பனைக் கடையில் தீவிபத்து
சேலத்தில் கார் உதிரி பாக விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் : சேலம் அழகாபுரத்தில் உள்ள கார் உதிரிபாகம் விற்பனைக் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் முயற்சி செய்துவருகின்றனர்.
சேலம் மாவட்டத்தின் முக்கியப்பகுதியான அழாகபுரத்தில் கோவையைச் சேர்ந்த சதீஷ் என்பவர், தனம் கார் உதிரிபாக நிறுவனத்தை நடத்தி வந்தார். இன்று அதிகாலை அந்தக்கடையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

கடையில் பிளாஸ்டிக் மற்றும் பைபர் பொருட்கள் அதிகம் இருந்ததால், தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. இதனால் அனைத்துப்பகுதிகளிலும் புகை மூட்டம் சூழ்ந்து, மக்கள் மூச்சுவிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காலை 6 மணியில் இருந்து எரிந்து வரும் தீயைக் கட்டுப்படுத்த, தீயணைப்புத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்தக்கடை அமைந்து இருக்கும் பகுதியில், இரண்டு பள்ளிகளும், பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அமைந்துள்ளதால் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டாதாக காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications