வேலூர் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து.. 2 பேர் உடல் சிதறி பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த போது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

வேலூர் மாவட்டடம் நாட்றாம்பள்ளி அருகே பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் இன்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Fire accident in vellore crackers godown : 2 killed

இதில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்த காந்தி மற்றும் பொன்னுரங்கம் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அனுமதியின்றி பட்டாசு குடோனில் நாட்டு வெடி தயாரித்தபோது திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வெடி குடோனில் விபத்து ஏற்பட்டதால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fire accident in vellore crackers godown. 2 labourers killed in this accident.
Please Wait while comments are loading...