சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் தீ விபத்து!
சென்னை: சென்னையில் அரசு அலுவலகங்கள் இயங்கும் சேப்பாக்கம் எழிலகத்தின் முதல் மாடியில் பற்றிய தீயை உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னையில் உள்ள மிகப் பழமையான கட்டிடங்களில் ஒன்று சேப்பாக்கம் காமராஜர் சாலையில் மெரினா கடற்கரைக்கு எதிரே உள்ள எழிலகமும் ஒன்று. இங்கு பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் 16-ந் தேதியன்று எழிலகத்தின் 3வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பின்னர் 2012ஆம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதியன்று நள்ளிரவில் இதே எழிலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் அன்பழகன் பலியானார். பல தீயணைப்பு துறை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் முக்கிய அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.

இந்த நிலையில் இன்று பகலில் எழிலகத்தின் முதலாவடி மாடியில் திடீரென தீ பற்றி எரிந்தது. தீ பரவியதில் முதலாவது மாடியில் இருந்த வேளாண்துறை அலுவலகம் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது.
இது பற்றி தகவல் அறிந்ததும் 4 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்து தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications