தென்காசி அருகே அதிகாலையிலேயே பற்றி எரிந்த இந்தியன் வங்கி.. தீயணைக்கும் பணி தீவிரம்
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலையிலேயே வங்கி ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறிய நிலையில் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து வருகிறார்கள். தீ விபத்துகான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே இந்தியன் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் இருந்து இன்று அதிகாலை நேரத்தில் ஜன்னல் வழியாக கரும்புகை வந்துகொண்டிருந்தது. இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசார் மற்றும்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து வருகிறார்கள். பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கி என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் சங்கரன்கோவிலில் உள்ள சிவன் கோவிலில் நேற்று இரவு சிவராத்திரையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்காக விடிய விடிய சிவ பக்தர்களும் கோவிலில் குவிந்து இருந்தனர். பூஜைகள் முடிந்த நிலையில் வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனங்கள், பஸ்களில் அதிகளவு கூட்டம் இருந்தது. இந்த நிலையில் தான் தீ விபத்தின் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியன் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications