வேளச்சேரி பணிமனையில் பறக்கும் ரயில் இன்ஜினில் திடீர் தீ
வேளச்சேரி பணிமனையில் பழுது பார்க்கப்பட்ட பறக்கும் ரயில் இன்ஜினில் பரவிய தீ, தீயணைப்பு வீரர்கள் உதவியால் அணைக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வேளச்சேரியில் மின்சார ரயிலின் இன்ஜினை வெல்டிங் செய்தபோது திடீரென தீப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, வேளச்சேரியில் பறக்கும் ரயில்களை பழுது பார்க்கும் பணிமனை உள்ளது. இங்கு, இன்று மதியம், ஒரு ரயிலின் இன்ஜினில் வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்தபோது, திடீரென தீ மளமளவென இன்ஜினில் பரவியது.

ரயில் இன்ஜினில் தீ பிடித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். பறக்கும் ரயிலில் தீ விபத்து என்ற தகவலால், பயணிகள் மத்தியில் பீதி நிலவியது. ஆனால் அது பணி மனையில் நிறுத்தப்பட்ட ரயிலில்தான் நடந்தது என்றபிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
பணி மனையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications