திருவண்ணாமலை: தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் மர்ம மரணம் - உயரதிகாரிகள் திட்டியதாக புகார்
திருவண்ணாமலை: தீயணைப்புத்துறை அலுவலர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
உயிரிழந்த அலுவலரின் பெயர் மணிகண்டன் என்பதாகும். இவர் திருவண்ணாமலையில் தீயணைப்புத்துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 19ம் தேதி அலுவலகத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராமசாமி, மணிகண்டனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மணிகண்டன் விஷம் அருந்தியதாகவும், இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டார்.
நான்கு நாள் சிகிச்சைக்குப் பிறகு, மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்ட உயர் அதிகாரிகள், அவரை இடமாற்றம் செய்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராமசாமி நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.
கடந்த 26ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் மணிகண்டன் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், மணிகண்டன் நேற்றிரவு பள்ளிப்பட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
பள்ளிப்பட்டு காவல்துறையினரோ மணிகண்டன் மாரடைப்பால் உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது உடல் வேலூர் மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, உயிரிழக்கும் முன்பாக மணிகண்டன் பேசியிருப்பதாக வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ் ஆப்பில் வெளியாகி இருக்கிறது.
தீயணைப்புத்துறையில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications