காஞ்சிபுரம் அருகே மதுபான கிடங்கிற்கு தீவைப்பு.. 3 லாரிகள், ரூ.80 லட்சம் மது பாட்டில்கள் நாசம்!
காஞ்சிபுரம் அருகே மதுபான கிடங்கிற்கு மர்மநபர்கள் தீ வைத்து தப்பி சென்றனர்.
Recommended Video

காஞ்சிபுரம்: ஓரிக்கையில் அரசு மதுபான கிடங்கினுள் மதுபானங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், 80 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களுடன் லாரிகளும் தீயில் எரிந்து நாசமானது.
காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை பகுதியில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சார்பில் அரசு மதுபான கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கிற்கு சென்னை, வாலாஜாபாத், புதுக்கோட்டை போன்ற இடங்களின் மதுபான தொழிற்சாலைகளிலிருந்து லாரிகளில் மதுபானங்களை ஏற்றி கொண்டு வந்து கிடங்கின் உள்ளே நிறுத்திவிடுவார்கள்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவும் அதேபோல, மதுபானங்கள் அடங்கிய 3 லாரிகள் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த 3 லாரிகளுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இதனால் லாரிக திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. கிடங்கினுள் தீ பிடித்து எரிவதை கண்ட அங்கிருந்தோர் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்ததனர். விரைந்து வந்த அவர்கள் தீயை போராடி அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர்.
எனினும், கிடங்கின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளும், அதிலிருந்த மதுபான பாட்டில்கள் என ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ வைப்பு சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலூகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications