நெருங்கி நெருங்கி வந்தாச்சு.. யார்னு தெரியுதா.. சட்டென வந்த "சக்சஸ்" தகவல்.. தமிழக அரசு "சர்ப்ரைஸ்"
சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக விஷ்ணு சந்திரனும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித்தும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. இதையடுத்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.. என்ன காரணம்? யார் இவர்கள்?
நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 16 கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.. தலைமை செயலாளர் இறையன்பு இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார்.
16 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்ட நிலையில், அதில் 2 பேர் கணவன் மனைவி என்று தெரியவந்துள்ளது... இதனையடுத்து, ஒரே நேரத்தில், தம்பதி இருவருக்குமே கலெக்டர் பதவி கிடைத்த நிலையில், வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அதிரடி மாற்றம்: நேற்றைய மாவட்ட கலெக்டர் இடமாற்றம் குறித்து அறிவிப்பில் ஐஏஎஸ் அதிகாரிகளான விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராகவும், சிவகங்கை கலெக்டராக ஆஷா அஜித்தும் நியமனம் செய்து கொண்டனர்... அதாவது, நடந்து முடிந்துள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில், விஷ்ணு + ஆஷா ஆகிய கணவன் மனைவி இருவருமே பக்கத்து பக்கத்து மாவட்ட கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் கூடுதல் விஷயமாக கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதற்கு முன்பு விஷ்ணு நகராட்சி நிர்வாகத்துறையிலும், ஆஷா அஜித் வழிகாட்டு குழுவின் பொறுப்பு இயக்குனராகவும் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது கலெக்டர்களாக பொறுப்புக்கு வந்துள்ளனர்.. தம்பதி இருவருமே கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.. இவர்களுக்கு 3 வயதில் பத்மா என்ற பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் 2 பேரும் தம்பதிகளாக இருப்பதாலும், 3 வயதில் குழந்தை இருப்பதாலும், பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் இவர்களை அரசு நியமித்துள்ளது, அதைவிட மகிழ்ச்சியான செய்தியாகும்.. ஐஏஎஸ் அதிகாரிகளான 2 பேருமே தமிழகத்தில் பணியமர்த்தப்பட்டார்கள். முதலில் தேவகோட்டை சப்-கலெக்டராக ஆஷா அஜித் பணிபுரிந்த நிலையில், பரமக்குடி சப்-கலெக்டராக விஷ்ணுசந்திரனும் பணியாற்றினார்கள்.

பூரிப்பு + மகிழ்ச்சி: இதற்கு பிறகு, நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக ஆஷா அஜித் பணியாற்றியபோது, விஷ்ணுசந்திரன் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றி வந்தாராம். இப்போதுதான், பக்கத்து பக்கத்து மாவட்டங்களுக்கு கலெக்டராக டிரான்ஸ்பர் ஆகி வந்துள்ளனர். கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ஆஷா அஜித் இதை பற்றி சொன்னதாவது:
"நாங்கள் 2 பேரும் முதல்முறையாக கலெக்டர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோம்... இது மிகுந்த மகிழ்ச்சியை தருவதோடு எங்கள் பொறுப்பையும் அதிகமாக்கி உள்ளது..
சபாஷ் வாழ்த்துக்கள்: எங்களை போன்று பல தம்பதிகள் உயர்அதிகாரிகளாக பணிபுரிந்து வருகிறார்கள்.. ஆனால், குடும்பம் நடத்துவதை நாங்கள் 2 பேருமே சிரமமாக கருதுவதில்லை... பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் பணிபுரிவதால், அவசர தேவைகளுக்கு 2 பேரும் எளிதாக சந்தித்து கொள்ள முடியும்... அரசு எங்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்துள்ளது.. அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக பணியாற்றுவோம்" என்று கனத்த நம்பிக்கையுடன் சொல்கிறார் ஆஷா அஜித்.. இந்த தம்பதிக்கு சோஷியல் மீடியவில் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications