“மீன்களை சாப்பிடாதீர்கள்”.. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் எச்சரிக்கை
கடலில் எண்ணெய் கலந்துள்ளதால் மீன்கள் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: எண்ணூர் கடலில் கப்பல் மோதியதால் கொட்டியுள்ள எண்ணெய்யால் ஆழ்கடல் மீன்களுக்கு பாதிப்பு இல்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மீன்களை உண்ண பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், பிடித்து வரும் மீன்கள் விலை போகாமல் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அச்சத்தை போக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கப்பல் மோதி கொட்டிய எண்ணெய் படலம் கடல் நடுவில் இருந்தால் நவீனகருவியின் துணை கொண்டு அகற்ற முடியும். ஆனால் எண்ணெய் படலம் கரையோரம் ஒதுங்கியுள்ளதால் நவீன கருவியை பயன்படுத்த முடியவில்லை.
இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் எண்ணெய் கடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் எண்ணெய் படலம் கிடையாது. அங்கு சென்றுதான் மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். அதனால் யாரும் மீன் சாப்பிட அச்சப்பட தேவையில்லை. எண்ணெய் கசிவால் ஆழ்கடல் மீன்களுக்கு பாதிப்பு இல்லை. மீன் சாப்பிடாதீர்கள் என வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் ரூ.49 கோடியே 49 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளனர். ரூ.124 கோடி இழப்பீடு தருமாறு 3 மாவட்ட மீனவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களுக்கு உரிய இழப்பிடு அரசு வழங்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications