மெரினாவில் தவிக்கும் பெண்கள், குழந்தைகள்.. படகில் உணவு, தண்ணீர் சப்ளை செய்யும் மீனவர்கள்
சென்னை: மெரினா கடற்கரையில் எஞ்சியுள்ள போராட்டக்காரர்களுக்கு மீனவர்கள் படகு மூலம் உணவு, தண்ணீர் சப்ளை செய்து வருகிறார்கள்.
மெரினாவில் இன்று போலீசார் தடியடி நடத்தியதையடுத்து பல ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள் சென்னை நகருக்குள் ஓடினர். அதேநேரம், சில பெண்களும், ஆண்களும் கடலை நோக்கி ஓடினர். இதனால் அச்சமடைந்த போலீசார் விரட்டுவதை நிறுத்திவிட்டனர்.
Fishermen come out in support of the protesters at Chennai's Marina Beach #Jallikattu pic.twitter.com/O51vPseSq1
— ANI (@ANI_news) January 23, 2017
நெருங்கி சென்றால் கடலுக்குள் சென்றுவிடலாம், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதும் போலீசார் போராட்டக்காரர்களை விட்டு சற்று தூரம் தள்ளியே நிற்கிறார்கள். போராட்டக்காரர்களில் பெண்களும், குழந்தைகளும் கூட இருக்கிறார்கள். வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், பசியாலும் அதில் சிலர் சுருண்டு விழுந்துள்ளனர்.
உணவு, தண்ணீர் கொண்டு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை அறிந்த மீனவர்கள், படகுகள் மூலம் விரைந்து வந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாடும், தண்ணீரும் கொடுத்து வருகிறார்கள். ஆனால் வெப்பத்தில் எவ்வளவு நேரம் பெண்கள், குழந்தைகள் நிற்க முடியும் என்பது புரியவில்லை. அவர்களில் பலரும் தங்கள் கைகளில் அப்துல் கலாம் போட்டோக்களை வைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications