மீனவர்கள் விவகாரம்: இலங்கை செல்லும் தமிழக குழு- அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
சென்னை: இலங்கையில் சிறையில் வாடும் மீனவர்களை சந்திக்கவும், மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழக மீனவர்கள் குழு இன்று கொழும்பு செல்கிறது. 5 பேர் கொண்ட இந்த மீனவர்கள் குழு, 6 நாட்கள் இலங்கையில் தங்கி மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில், மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துகிறது. மத்திய அரசோ, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது மீனவர்களின் குமுறல்.
இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் ஓயவில்லை.
இதனையடுத்து தமிழ்நாட்டு மீனவர சங்க பிரதிநிதிகள் 5 பேர் அடங்கிய குழு இன்று இலங்கை செல்ல இருக்கிறது. இந்த குழுவினர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை சந்தித்து பேச இருக்கிறது.
மேலும் இலங்கை அரசுடன், தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் இந்த












Click it and Unblock the Notifications