மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க வங்க கடலில் மீன்பிடித் தடைக்காலம் 15-ம் தேதி தொடக்கம்
மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க வங்கக் கடலில் ஆழ்கடல் மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
குமரி: வங்கக் கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடைவிதிக்கும் காலம் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 45 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த நாட்களில் ஆழ்கடலில் மீன்கள் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும்.

அதன்பின்பு கடலில் மீன்கள் அதிக அளவில் உற்பத்தியாகும். இந்த காலக்கட்டத்தில் விசை படகுகள் கடலுக்கு சென்றால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். இந்த நாட்களில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு எந்த விசைபடகுகளும் கடலுக்கு செல்லக்கூடாது என்ற விதிமுறை உண்டு. இதனை மீன் வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
அதன்படி வங்க கடலில் கன்னியாகுமரி முதல் சென்னையை அடுத்த திருவள்ளூர் வரையிலான கடல் பகுதியில் வருகிற 15-ஆம் தேதி முதல் மீன் பிடி தடை காலம் தொடங்குகிறது. மே மாதம் 30-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும். அது வரை எந்த விசைபடகுகளும் கடலுக்கு செல்லாது.
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம், தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம், ராமேசுவரம், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விசை படகுகள் எதுவும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாது. இந்த காலக்கட்டத்தில் இப்பகுதி விசை படகு உரிமையாளர்கள் தங்களின் விசை படகுகளை கரைக்கு கொண்டு வந்து பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தங்கள் மீன் பிடி உபகரணங்களையும் சீரமைப்பார்கள்.
அதே நேரம் கடலுக்கு செல்ல கட்டுமரங்களுக்கு தடை இல்லை. இதில் மீன் பிடிக்க செல்பவர்கள் கரையோரத்தில் மீன் பிடித்து திரும்பி விடுவார்கள். இதனால் உள்நாட்டில் மீன்களுக்கு கடும் கிராக்கி நிலவும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications