மீன் பிடித் தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவு... மீன்கள் விலை குறைய வாய்ப்பு
தமிழகத்தில் அமலில் இருந்து வந்த மீன்பிடித்தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் கடலுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி மீன்பிடிக்க தடை அமலுக்கு வந்தது. இந்த சமயத்தில் மீன்களின் இனப்பெருக்கம் காலம் என்பதால் ஆண்டுதோறும் 45நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் 45 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். மீன்கள் கிடைக்காமல் சந்தையில் மீன்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
கடந்த சில நாட்களாக, விசைப்படகுகளுக்கு தமிழக அரசின் உத்தரவுப்படி இளம்பச்சை நிற வர்ணம் பூசும் பணியும், வலைகளை பழுதுபார்க்கும் பணியும் நடைபெற்றன. அதேபோன்று மீன்களைப் பதப்படுத்த ஐஸ் கட்டிகள், குடிநீர், டீசல் ஆகியவை படகுகளில் சேகரிக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் மீன்பிடித்தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதால், கடலுக்குச் செல்ல மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர். அடுத்த சில நாட்களில் மீண்டும் மீன்கள் தாராளமாக கிடைக்கும் என்றும் இதனால் மீன்கள் விலை கணிசமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications