மீன்பிடித்தடைக்காலம் எதிரொலி - படகு, வலைகள் பராமரிப்பு துவக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன்பிடித்தடைக்காலம் தொடங்கியுள்ளதை அடுத்து படகுகள் சீர்செய்யும் பணியினை மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்கத்தை ஊக்கப்படுத்த, கடல் சுற்றுச்சூழலை சமன் செய்யும் நோக்கத்தில் ஆண்டுதோறும் 45 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க தடையில்லை.

கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று அமலுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் 365 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகளுக்கு வர்ணம் பூசுதல், சிறு சிறு கோளாறுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல், புதிய வலை தயார் செய்தல் போன்ற பணிகளை மீனவர்கள் மேற்கொள்வர். அதன்படி நேற்றே பராமரிப்பு பணிகளை மீனவர்கள் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் 45 நாள் தடைக்காலத்தில் கேரளத்தை சேர்ந்த விசைப்படகுகள் அத்துமீறி வந்து மீன்பிடிக்க வாய்ப்புள்ளது. அதனைத் தடுக்க வேண்டும் என்று, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள், காவல் துறையினர், கடலோர காவல் படை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் ஆலோசனை நடத்தினார். கடலோர காவல் படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என, ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்பேரில் பிற பகுதி விசைப்படகுகள் இந்த பகுதிக்கு வந்து தடைக்காலத்தில் மீன்பிடிப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்களாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, இங்கு 61 நாட்கள் தடை கிடையாது. வழக்கம் போல் 45 நாட்கள் தடை மட்டுமே அமலில் இருக்கும் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் மீன்பிடி தளத்திலிருந்து செல்லும் 350 விசைப்படகுகள் நேற்று முதல் கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி மீனவர்கள் கூறும்போது, "மீன்பிடி தடைக்காலங்களில் அத்துமீறும் கேரள விசைப்படகு மற்றும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மீன்வளத்துறை, கடலோர காவல்குழும போலீஸார் இணைந்து இதற்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும். கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் அமல்படுத்தும் போது, மேற்கு கடற்கரை பகுதிகளிலும் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications