பச்சமுத்து சொல்லிதான் மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தோம்.... மேலும் 5 மாணவர்கள் புகார்
சென்னை: எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்து சொல்லிதான் மருத்துவ படிப்புக்காக வேந்தர் மூவீஸ் மதனிடம் பணம் கொடுத்ததாக மேலும் 5 மாணவர்கள் மோசடி புகார் தெரிவித்துள்ளனர்.
வேந்தர் மூவிஸ் மதனிடம் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்காக ரூ75 கோடி பணம் கொடுத்து ஏமாந்ததாக 112 மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. சினிமா பைனான்சியர்கள் அடுத்தடுத்து பச்சமுத்துவுக்கு எதிராக புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் 5 மாணவர்கள், மத்திய குற்றப்பிரிவு போலீசில் நேற்று புகார் அளித்துள்ளனர். அதில் பச்சமுத்து வற்புறுத்தலின்படியே வேந்தர் மூவிஸ் நிறுவனர் மதனிடம் மருத்துவப் படிப்புக்காக பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறியுள்ளனர்.\
இந்த வழக்குகளிலும் அடுத்தடுத்து பச்சமுத்து கைது செய்யப்படக் கூடும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications