”பள்ளி”ப்பாளையத்தில் “பல்லி” விழுந்த சாம்பாரை சாப்பிட்டு ஐந்து பேருக்கு வாந்தி,மயக்கம்!
நாமக்கல்: நாமக்கல்லில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் நேற்று இறந்தார்.
இந்த நிலையில் துக்கம் விசாரிப்பதற்காக சேலம், செவ்வாய் பேட்டை பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் 5 பேர் நேற்று இரவு சேலத்தில் இருந்து ஆவாரங்காட்டுக்கு சென்றனர்.
அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு இட்லிக்கடைக்கு சென்று இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பவித்ரா, நிஷா, ராஜாமணி, உஷாராணி, மாதேஷ் ஆகிய 5 பேருக்கும் திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்தனர்.
அங்கிருந்தவர்கள் உடனே அவர்களை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். தற்போது அவர்கள் குணமடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிப்பாளையம் போலீசார், இட்லி கடைக்கு சென்று விசாரித்த போது அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி விழுந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications