நெல்லையில் பன்றிகாய்ச்சலால் பாதிக்கபட்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு
நெல்லை அரசு மருத்துவமனையில் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு நாங்குநேரியை சேர்ந்த 5 வயது சிறுவன் ஜோஸ்பின் உயிரிழந்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை : நெல்லை அரசு மருத்துவமனையில் பன்றிகாய்ச்சலால் பாதிக்கபட்டு நாங்குநேரியை சேர்ந்த 5 வயது சிறுவன் ஜோஸ்பின் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் அண்மைகாலமாக ஸ்வைன் ஃப்ளு எனப்படும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் நாங்குநேரியில் உள்ள பரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஜோஸ்பின் சில தினங்களாக பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30மணிக்கு மாற்றப்பட்டு தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
நெல்லையில் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு இதுவரை 2 பேர் உயரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications